×

விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 20:  தண்ணீர் தேடி விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க, பர்கூர் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில், தண்ணீர் நிரப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சுற்றி தொகரப்பள்ளி, வரமலைகுண்டா உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இங்கு, மான் மற்றும் கரடி உள்பட ஏராளமான வன விலங்கினங்கள் உள்ளன. கோடை காலம் தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதிகளில்  கடும் வெயில் வாட்டியெடுத்து வருகிறது. மேலும், வனப்பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் தாக சாந்திக்காக ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் பர்கூர், கந்திகுப்பம் பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 2 மான்கள், சென்னை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாகனம் மோதியதில் உயிரிழந்தன. தொடர்ந்து வன விலங்குகள் தண்ணீர் தேடி  கிராமத்திற்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். செய்துள்ளனர். அதன்படி, வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் டிராக்டர்கள் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. வன விலங்குகள் இந்த தொட்டியில் தண்ணீரை குடிப்பதால் வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் வருவது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : forest ,town ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...