×

தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்

கிருஷ்ணகிரி, மார்ச் 20: தொழிற்சாலை அதிகமுள்ள ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதனுடன் சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கையை, நேற்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஓசூர் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதன்படி, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்.  தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட ஓசூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். அதுபோல் ஓசூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தி தரப்படும்.
நகரின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஓசூர் உள்வட்ட சாலை அமைக்கப்படும். அனைத்து தரப்பு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள கிருஷ்ணகிரி- ஓசூர்- திருப்பத்தூர் வழித்தடத்தில் புதிய ரயில் வழித்தடத்தை ஏற்படுத்தித்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரின் இந்த தேர்தல் அறிக்கையானது தொழில் முனைவோர், தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : business center ,factories ,Hosur ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...