×

வாடிக்கையாளர்கள் தினமும் அவதி திருவாடானையில் கூடுதலாக தேசிய வங்கி

திருவாடானை, மார்ச் 19:  திருவாடானையில் கூடுதலாக தேசிய வங்கி திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, பிரதமருக்கு அனுப்பிய மனுவில், ‘திருவாடானை தொகுதி மற்றும் தாலுகா தலைமையிடமாகவும் உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கல்வி அலுவலகம், நீதிமன்றம், காவல் நிலையம் என அனைத்து வகையான அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளன. திருவாடானையில் தேசியமயமாக்கப்பட்ட ஒரே வங்கியான ஸ்டேட் வங்கி மட்டும் தான் உள்ளது.

கூடுதலாக பாண்டியன் வங்கியும், கூட்டுறவு வங்கி ஆகியவைகள் உள்ளன. ஸ்டேட் வங்கியை தவிர மற்ற வங்கிகளில் ஏடிஎம் வசதி இல்லை. இதனால் அதிகமானோர் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். மேலும் மகளிர் சங்கங்கள் அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் தினமும் வங்கிக்கு சென்று வருவதால், வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த வங்கிக்கு உரிய ஒரே ஏடிஎம் சேவை மையம் பல நேரங்கள் பணம் நிரப்பி வைக்காமல் காலியாகவே உள்ளது.
இந்த வங்கியில் டிடி எடுக்க வேண்டுமானால் கூட பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திலும் பல ஆயிரம் பேர் காப்பீடு செய்யவும், பணம் எடுக்கவும் வருவதால் நெருக்கடி ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. எனவே வளர்ந்து வரும் இந்த ஊருக்கு கூடுதலாக தேசிய வங்கி சேவை அவசியமாகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக தேசிய வங்கி ஒன்றை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

Tags : bank ,customers ,
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...