நீடாமங்கலம் அருகே கப்பிகள் பெயர்ந்த சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

நீடாமங்கலம்,மார்ச்14: நீடாமங்கலம் அருகில் கப்பிகள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ள சித்தமல்லி பன்னிமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் சித்தமல்லி செல்லும் சாலையில் இணைப்பு  சாலை பாமணியாறு மேல்கரையிலிருந்து பன்னிமங்கலம் வரையிலான சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக கப்பிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளது.இந்த சாலையில் சித்தமல்லி, வெள்ளங்குழி, நடுப்படுகை, பன்னிமங்கலம், வாசுதேவமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து மக்கள் நீடாமங்கலம் வந்துதான் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கி செல்ல வேண்டும். மற்றும் வங்கிகளுக்கு நீடாமங்கலம் வந்து தான் செல்லவேண்டும். அப்பகுதி மாணவ மாணவிகள் நீடாமங்கலம்,திருவாரூர்,தஞ்சை,குடந்தை,மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கல்வி கற்க சென்று வருகின்றனர்.இரவு நேரங்களில் வரும் போது சாலை மோசமாக உள்ளதால் சிலர் இரு சக்கர வாகனங்கள் இரவு நேரத்தில் பஞ்சராகி விடுகிறது, மாணவர்கள் சிலர் கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகள் சாலையை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகாவது விரைவில் சாலை பணியை தொடங்கி முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: