ஓசூர், மார்ச் 8: ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில், 48 குழுவினர் பங்குபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி 12 நாட்களாக நடந்து வருகிறது. புதியதாக பரத நாட்டியம் கற்போர், இந்த கோயிலில் முதலில் அரங்கேற்றம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் ஓசூர் நகரங்களிலிருந்து திரளானோர் பங்கேற்றுள்ளனர். நேற்று ஓசூர் நகரைச் சேர்ந்த குமாரி ஸ்ராவந்தி சங்கர், யுத்திகா சரவணன், சாமுத்ரிகா கோபிநாத், நிகாரிகா கோபிநாத் ஆகியோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதம் ஆடினர்.