ஊத்தங்கரையில் ஏரிகளில் 1.06 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு

ஊத்தங்கரை, அக்.22: ஊத்தங்கரை தொகுதிக்கு உட்பட்ட 4 ஏரிகளில், 1 லட்சத்து 6 ஆயிரம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டது. இதில் உப்பாரப்பட்டி ஊராட்சி சாலகனேரி, கெங்கப்பிராம்பட்டி ஏரி, மாரம்பட்டி பெரியஏரி, புளியந்தோப்பு ஏரி உட்பட்ட 4 ஏரிகளில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன், ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன், மீனவர் சங்க தலைவர் ரத்தினம் ஆகியோர் மீன் குஞ்சுகளை விட்டனர். இதன்மூலம் மீன்வளம் பெருகி, ஏரிபகுதி மீனவர்களுக்கு உதவியாக இருக்கும் என மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மீன்வளத் துறை உதவி இயக்குனர் ரத்தினம், ஆய்வாளர் பிரபு, மீன் வள மேற்பார்வையாளர் நந்தகுமார் மற்றும் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post ஊத்தங்கரையில் ஏரிகளில் 1.06 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு appeared first on Dinakaran.

Related Stories: