கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட உறுப்பினர்களுக்கு பயிற்சி

அவிநாசி,பிப்.22: கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சாந்திலட்சுமி தலைமை தாங்கி, பயிற்சி  முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட பயிற்சியாளர்கள் சிவன்மலையப்பன், அங்கயற்கண்ணி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர். இந்தப் பயிற்சியில் அவிநாசி ஒன்றியத்தை சேர்ந்த சேவூர், குப்பாண்டம்பாளையம், பழங்கரை, துலுக்கமுத்தூர், கருவலூர், தண்டுக்காரன்பாளையம், பொங்கலூர், ஆலத்தூர், புளிப்பார், தத்தனூர் உள்ளிட்ட 31 ஊராட்சிகளில் இருந்தும்  ஊராட்சி செயலாளர்கள், வறுமை ஒழிப்பு சங்கத்தினர், சமுதாயம் வள மைய பயிற்றுனர்கள், ஊராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்வது குறித்தும், பள்ளி மேல்நிலை தொட்டி, அங்கன்வாடி, விவசாய கிடங்கு ஆகிய கட்டிடங்களின் வசதிகள் குறித்தும் சமூக வரைபடம்,கிராம வளம், மற்றும்  வரைபடம் தயாரிப்பது குறித்தும் முகாமில் பயிற்சி வழங்கப்பட்டது.

Related Stories: