ஓசூர், பிப்.21: ஓசூரில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி அகில இந்திய அமைப்பு செயலாளருமான கே.ஏ.மனோகரன் பிறந்த நாள் விழா, இன்று (21ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஓசூரில், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கே.ஏ.மனோகரனின் ஆதரவாளர்கள் சார்பில், மலை மீது அமைந்துள்ள சந்திர சூடேஸ்வரர் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியினர், ஐஎன்டியூசி சார்பில் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு உணவு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.