×

3ம் வகுப்பு மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராமப்புறத்தை சேர்ந்த 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.ஆயிரம்  வழங்கப்படுகிறது. தகுதிகள்: பெற்றோர் அல்லது காப்பாளர்க்கு ஆண்டு வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். சாதிச்சான்றிதழ் அவசியம். விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகத்தை நேரிலோ 9488115131 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

தெரிஞ்சுக்கலாம் வாங்க! இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்பிரிவு சிஆர்பிஎஃப் (சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ்). இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1939ல் உருவாக்கப்பட்டது. அப்போது இதன்பெயர் ‘கிரௌன் ரெப்ரசென்டேடிவ் போலீஸ்’ என்பதாகும். பின்பு 1949ல் தற்போதைய பெயருக்கே மாற்றப்பட்டது. 2 பெண்கள் பட்டாலியன் உட்பட 210 பட்டாலியன்களை கொண்டுள்ளது. நாட்டின் பிரபல வழிபாட்டுத்தலங்கள் பலவற்றின் பாதுகாப்பை இது மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிஆர்பிஎஃபின் துணைப்பிரிவே ‘கிரீன் ஃபோர்ஸ்’ எனப்படும்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை