பழுதடைந்து கிடக்கும் திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையம்

திண்டிவனம், பிப். 21: திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த போக்குவரத்து காவல்நிலையம் 1902ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் மிகவும் பழுதடைந்து கட்டிடத்தின் மேல்பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. போக்குவரத்து காவல் நிலையம் தற்போது செயல்பட்டு வரும் கட்டிடம் திண்டிவனம் நகர காவல் நிலையம் செயல்பட்டு வந்த இடம். திண்டிவனம் நகர காவல் நிலையம் புதிதாக கட்டப்பட்டதையடுத்து 2010ஆம் ஆண்டு திண்டிவனம் காவல் நிலையம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் புதுச்சேரி சாலையில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்த போக்குவரத்து காவல் நிலையம் இந்த பழமை வாய்ந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் மழை காலங்களில் காவல்நிலையத்தின் உள்ளே மழைநீர் சொட்டுவதால் முக்கிய கோப்புகள் நனைந்து சேதமாகிறது.

மேலும் காவல்நிலைய வளாகம் இருசக்கர வாகன நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. பழுதடைந்த கட்டிடத்தை புனரமைப்பு செய்து தருமாறு

சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: