பொதுமக்கள் புகார் உத்தமபாளையம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம்

உத்தமபாளையம், பிப்.20: உத்தமபாளையம் ஹாஜிகருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு கருத்தரங்கம் நடைபெற்றது. ஹாஜிகருத்தராவுத்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை கல்லூரி தாளாளர் தர்வேஷ்மைதீன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முகமதுமீரான் தொடக்க உரையாற்றினார். ஊடக கல்வியும், சமூக மாற்றமும் என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜநாயகம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: