திருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை

சென்னை, பிப். 15:  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது செஞ்சி கே.எஸ்.மஸ்தான்( திமுக) பேசியதாவது:செஞ்சி தொகுதியில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய 2 வட்டங்களில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் மேல்மலையனூர் வட்டாட்சியர். 12 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பரிந்துரை செய்துள்ளார். செஞ்சி வட்டத்திலும் 26 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வருவாய் துறை பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரையிலும் அது நிலுவையில் உள்ளது. அந்த பணிகளை துரிதப்படுத்தி 2 வட்டங்களிலும் உள்ள திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: ஒவ்வொரு கட்டமாக இந்த நடவடிக்கையை கூர்ந்து கவனித்து உரிய பரிந்துரையை மாவட்ட நிர்வாகத்திற்கு செய்து கொண்டு வருகிறார்கள். அந்த பரிந்துரையை ஏற்று துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

மஸ்தான்(திமுக): திருநங்கைகளுக்கு நல வாரியம் மூலமாக ஆண்டுக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படுகிறது. அதை ரூ.24,000 உயர்த்தி, மாதந்தோறும் ரூ.2000 கிடைக்க செய்ய வேண்டும். மானியத்தோடு ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தில் திருநங்கைகளுக்கு முழு மானியத்தோடு இலவசமாக ஸ்கூட்டர் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ், பேருந்துகளில் தனி இருக்கை ஒதுக்க வேண்டும். கல்வி தகுதிக்கு ஏற்ற மாதிரி அரசு வேலை வாய்ப்பில் வயது வரம்பை தளர்த்தி வேலை வழங்க வேண்டும். கூத்தாண்டவர் கோயில் திருவிழா சித்ரா பவுர்ணமி காலத்தில் நடைபெறுகிறது. இந்திய அளவில் திருநங்கைகள் அங்ேக கூடுகிறார்கள். அதற்கு மாவட்ட அளவில் விடுமுறை வழங்க வேண்டும்.அமைச்சர் உதயகுமார்: வீட்டுமனை பட்டா கேட்டார். அது வருவாய்துறை சம்பந்தமானது. திருநங்கைகளுக்கு ஒரு மானியக்கோரிக்கையை முன்வைத்து அனைத்து துறை அமைச்சர்களையும் சேர்த்து அதனை வருவாய் துறை சம்பந்தமானதாக கூறமுடியாது. அதற்கு நான் பதில் கொடுக்க முடியாது. இருந்தாலும் முதல்வருடைய கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண முடியுமேயொழிய இதை வருவாய் துறை தீர்வு காண முடியாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: