மயிலம் முருகன் கோயிலில் 2 ஆயிரம் தொண்டர்கள் முடி காணிக்கை

மயிலம், பிப். 15:  தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலகுறைவு அடைந்து அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் பூரண குணமடைந்தால் முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் முடிகாணிக்கை செலுத்துவது மற்றும் பால்குட ஊர்வலம்  சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து சென்னை வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

Advertising
Advertising

 இதனையடுத்து நேற்று முன்தினம் தேமுதிக விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டு முடிகாணிக்கை செலுத்தினர். பின்னர் விநாயகர் கோயில் குளத்திலிருந்து பால்குடம் காவடி எடுத்தவாறு மலை மீது ஊர்வலமாக வந்து பாலசுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை நிர்வாகிகள் உட்பட கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Related Stories: