‘அரசு அடையாள அட்டைகளை அனுமதியின்றி அச்சிட கூடாது’

விழுப்புரம், பிப். 15: விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரிண்டிங் பிரஸ், பிளெக்ஸ், ஜாப் டைப்பிங் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கி பேசுகையில், எந்தவொரு பதிவு செய்யப்பட்ட லேபிள்களை உரிமையாளர் அனுமதியின்றி அச்சடிக்கவோ, ஜெராக்ஸ் எடுக்கவோ கூடாது. ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஜாதி, மத கட்சி விரோதமான நோட்டீஸ் அல்லது பிளெக்ஸ் போர்டு அடித்து அதன் மூலம் சட்டம் ஒழுங்கு ஏற்படும் பட்சத்தில் அனைத்து தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான முறையில் ஸ்மார்ட் கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை போன்ற அரசு சார்ந்த அட்டைகளை அரசின் அனுமதியின்றி அடிக்கக்கூடாது. பிளெக்ஸ் போர்டுகள் பிரிண்ட் செய்யும்போது யாரையும் புண்படுத்தும் வகையில் வாசகங்கள் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும், என்றார். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: