டூவீலர் விபத்தில் பெண் பலி

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் அருகே எட்டிவயல் அனுசியாபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கண்ணகி. கணவர் இறந்து விட்ட நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு கூலித்தொழிலாளி கோவிந்தன் டூவீலரில் லிப்ட் கேட்டு வந்துள்ளார். லாந்தை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, டூவீலர் நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் காயம் அடைந்த கண்ணகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராமநாதபுரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த கண்ணகிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

× RELATED இளம்பெண் திடீர் மாயம்