சோழவந்தான் திருவேடகத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

சோழவந்தான், பிப். 14: சோழவந்தான் அருகே திருவேடகம், தென்கரையில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்து. ஊராட்சி செயலாளர் ராஜா என்ற பெரியகருப்பன் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேகர் வரவேற்றார். உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு கிராமக்களிடம் குறைகளை கேட்டறிந்து திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றார்.

தொடர்ந்து நூலகம், விளைபொருட்களுக்கு அரசு கொள்முதல் நிலையம், இலவச வீடு, கல்விக்கடன் தள்ளுபடி, ஏடகநாதர் கோயிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறைகள், தங்குமிடம், முதியோருக்கு பேட்டரி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் தென்கரை கிராமத்தில் ஊராட்சி செயலாளர் முருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சோமு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து புதிய அரசு கல்லூரி, கழிப்பறை, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கோகுல்நாத், கண்ணன், முருகன்,வழக்கறிஞர் முருகன், பேரூர் முனியாண்டி , தருண்ராஜா, பண்ணைச்செல்வம், சக்திவேல், திருமுருகன், ஆனந்த்,ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: