நிலத்தகராறில் மோதல்: 2 பெண்கள் காயம்

புளியங்குடி, பிப்.14: சேர்ந்தமரம் அருகேயுள்ள கே.வி.முத்துசாமிபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மனைவி இந்திரா(42). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த மாரியம்மாள்(45). என்பவருக்கும் விவசாய நிலம் உள்ளது.  நேற்று முன்தினம் முருகனும், இந்திராவும் தங்களது வயலில் பூக்கள் பறிக்கும்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாரியம்மாள், இடம் சம்பந்தமாக தம்பதியுடன் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து ஒருவரையொருவர் கம்பு மற்றும் கையால் தாக்கி கொண்டனர்.  இதில் காயமடைந்த இந்திராவும், மாரியம்மாளும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக இந்திரா கொடுத்த புகாரின் பேரில் மாரியம்மாள் மீதும், மாரியம்மாள் புகாரின் பேரில் இந்திரா, முருகன், அவரது மகன் ஆறுமுகச்சாமி ஆகியோர் மீது சேர்ந்தமரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: