புளியம்பட்டி அந்தோணியார் ஆலய பெருவிழாவில் சப்பர பவனி

நெல்லை, பிப். 12: புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவில்  சப்பர பவனி நடந்தது. இன்று சிறப்பு திருப்பலி நடக்கிறது.புளியம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில், ஆண்டு தோறும் 13 நாட்கள் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு பெருவிழா, கடந்த 31ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பாளை. மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடிகள் அர்ச்சிக்கப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தது. இதில் திருத்தல அதிபர் மரியபிரான்சிஸ், உதவி பங்குத்தந்தையர் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்குதந்தைகள், அருட்சகோதரிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று சப்பர பவனி நடந்து.  இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.இன்று (12ம் தேதி) காலை 11.30 மணிக்கு பெருவிழா பாளை மறைமாவட்ட அப்போஸ்தல பரிபாலகர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் திருப்பலி நடக்கிறது. 13ம் தேதி காலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.   திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

Related Stories: