காங்கயம் வட்டார கல்வி அலுவலகத்தில் மீண்டும் பணியில் சேர கடிதம் அளிக்கும் ஆசிரியர்கள்

காங்கயம், ஜன. 30:  கோரிக்கைகளை முன் வைத்து போராடி வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காங்கயம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு இரவு 8 மணிக்கு ஆசிரியர், ஆசிரியைகள் பணியில் மீண்டும் சேர கடிதம் எழுதி கொடுக்க குவிந்தனர்.  ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலைக்குள் பணிக்கு திரும்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.   இதனை அடுத்து ஆசிரியர்கள் எழுதிய கடிதத்தில் மாணவர்களின் நலன் கருதி ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் இருந்து விலகி பணிக்கு செல்வதாகவும், ஆதலால் நாளை முதல் பள்ளியில் பணி புரிய அனுமதிக்க வேண்டி காங்கயம் வட்டார கல்வி அலுவலரிடம் 77 பேர் கடிதம் கொடுத்தனர்.  இது குறித்து ஏஈஒ., சுசீலா கூறியதாவது: கடந்த 5நாட்களாக பணிக்கு செல்லவில்லை தற்போது போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள் எத்தனை பேர் என விவரம்

தெரிந்து கொள்ள கடிதம் பெறப்படுவதாக தெரிவித்தார்.

Related Stories: