சீர்காழி அருகேமக்களை அச்சுறுத்தும் குரங்குகூண்டு வைத்தும் சிக்கவில்லை

சீர்காழி, ஜன.25: சீர்காழி அருகே மக்களை அச்சுறுத்தும் குரங்கு கூண்டு வைத்தும் சிக்காததால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது.சீர்காழி அருகே தென்னலக்குடி கிராமத்தில் கடந்த 1 வாரமாக ஒரு ஆண் குரங்கு சாலைகளில் நடந்து செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்து வருகிறது. இதேபோல், வயல்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும் அவ்வப்போது கடித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். பொதுமக்களை கடித்து வரும் குரங்கை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், நாகை வன உயிரின காப்பாளர் நாகாசதிஷ்கிடிசாலா உத்தரவின் பேரில் சீர்காழி வனச்சரக அலுவலர் கருப்பு மேற்பார்வையில் வனத்துறை அலுவலர்கள் தென்னலக்குடி பகுதியில் முகாமிட்டு ஒரு இடத்தில் கூண்டும், மற்றொரு இடத்தில் வலையும் வைத்து குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குரங்கு சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இதுவரை இந்த குரங்கு 15 நபர்களையும், 5 கால்நடைகளையும் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே கால்நடை மருத்துவரை வரவழைத்து மயக்கஊசி செலுத்தி குரங்கை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்

கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: