கூட்டமின்றி வெறிச்சோடிய இடைப்பாடி புதன்சந்தை

இடைப்பாடி, ஜன.24: இடைப்பாடியில் வெள்ளாண்டி வலசை, நடுத்தெரு, கவுண்டம்பட்டி, தாவாந்தெரு, மேட்டுதெரு, ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு, பழையபேட்டை, புதுப்பேட்டை, சின்னமனலி, க.புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், பழனிக்கு பாத யாத்திரையாக காவடி எடுத்து நடைபயணமாக சென்றுள்ளனர். இதனால் இடைப்பாடியில் நேற்று கூடிய புதன் சந்தையில், வழக்கத்தை விட குறைவாக 10 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. 50க்கும் குறைவான கடைகள் மட்டுமே போடப்பட்டிருந்தது. பெரும்பாலான மக்கள், பழனிக்கு பாத யாத்திரையாக சென்றதால், சந்தையில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் நேற்று சந்தையில் ₹2லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: