×

அஞ்செட்டி அருகே ரேஷன் கடையில் எம்எல்ஏ ஆய்வு

தேன்கனிக்கோட்டை, ஜன.22:அஞ்செட்டி அருகே கோட்டையூர் ரேஷன் கடையில் தளி பிரகாஷ் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அஞ்செட்டி தாலுகா கோட்டையூர் மலை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராமத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டை தாரார்களுக்கும் முறையாக அரிசி, பருப்ப, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற அத்யாசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என விற்பனையாளர் மற்றும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது அஞ்செட்டி ஒன்றிய திமுக பொறுப்பாளர் நாகன், தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், முன்னாள் பொதுக்குழு கங்கப்பா, ஒன்றிய இளைஞரணி பிரபாகர், ரவி, சந்துரு, நூரொந்தப்பா, சீனிவாசன், பதி மற்றும் கோட்டையூர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : MLA ,ration store ,Anjeta ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...