நமசிவாயபுரம் பழத்தோட்டத்தில் கலெக்டர் ஆய்வு

சின்னசேலம், ஜன. 22:   சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரத்தில் உள்ள பழத்தோட்டத்தில் சிறப்பான முறையில் மரக்கன்றுகள் வளர்ப்பிற்கு ஊராட்சி நிர்வாகத்தை கலெக்டர் பாராட்டினார்.சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சுமார் 3.5 ஏக்கர் அளவில் பழத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மா, வேம்பு, புளி உள்ளிட்ட பழம் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் வகையில் இரண்டு மரக்கன்றுகளுக்கும் இடையில் சுமார் 2மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், சுமார் 3அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மழை காலத்தில் இந்த

குழியில் மழைநீர் தேங்குவதன் மூலம், மரக்கன்றுகள் செழித்து வளரும். அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறையாமல் இருக்கும்.இந்நிலையில் இந்த பழத்தோட்டத்தை செயற்பொறியாளர் ராஜா மற்றும் பிடிஓக்கள் செந்தில்முருகன், துரைசாமி ஆகியோருடன் சென்று கலெக்டர் சுப்ரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மரக்கன்றுகள் நேர்த்தியாக நடப்பட்டு, நீர் தேங்கும் வகையில் பள்ளம் தோண்டி வைத்திருப்பதை கண்டு வியந்து ஊராட்சி நிர்வாகத்தை பாராட்டினார். இதையடுத்து அருகில் உள்ள பழத்தோட்டத்தையும் நேர்த்தியாக பராமரிக்க வேண்டும் என்று ஊராட்சி செயலாளர் கோவிந்தனுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Stories: