முத்துப்பேட்டையில் சாலைமறியலில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகி உள்பட 15 பேர் மீது வழக்கு

முத்துப்பேட்டை, ஜன.22: முத்துப்பேட்டையில்சாலை மறியலில் ஈடுபட்ட தமுமுக நிர்வாகி உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சமீபத்தில் தாக்கிய கஜா புயலின்போது அனைத்து தரப்பு மக்களும் வீடுகள், உடமைகள், வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். புயல் நிவாரணம் வழங்குவதில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து  முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறியும் அதிகாரிகளை கண்டித்தும் கடந்த 19ம் தேதி சாலை மறியலில் மக்கள் ஈடுபட்டனர். இதனால் சுமார்  4மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்ஐ கணபதி ஆகியோர் நடந்த சாலை மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறி போராட்டத்தில் தலைமை வகித்த கருத்தப்பா சித்திக், மறியலில் பங்கேற்ற வழக்கறிஞர்  தாஜீம், தமுமுக நகர தலைவர்  சம்சுதீன் உள்பட  15பேர்  மீது வழக்கு பதிவு செய்து அவர்களை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: