வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா

வேதாரண்யம், ஜன.22: வேதாரண்யம் வேதாரண்ய சுவாமி கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா நடைபெற்றது.வேதாரண்யம், வேதாரண்ய சுவாமி கோவில் பழமை வாய்ந்த புகழ்பெற்ற கோயில். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தந்த இடம். இக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மாசி மக உற்சவ நிகழ்ச்சி பத்திரிக்கை வாசிக்கப்படும் நிகழ்ச்சியான பட்டோலை வாசிக்கும் நிகழ்ச்சி வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதியில் நடைபெற்றது.

தொடர்ந்து, வௌ்ளி ரிஷப வாகனத்தில் வீரகத்தி விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா எடுத்துச் செல்லப்பட்டு, வேதாமிர்த ஏரி என்னும் தீர்த்த குளத்தில், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதினம் செவ்வந்தி நாத பண்டார சந்நிதி, கோயில் நிர்வாக அதிகாரி (கூடுதல் பொ) கவியரசு, ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம் உட்பட உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: