சுரண்டை அந்தோணியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி

சுரண்டை,ஜன.22:  சுரண்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. சுரண்டை புனித  அந்தோனியார் ஆலய திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி, நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் சுரண்டை சுற்றுப்பகுதியை சேர்ந்த பங்குத்தந்தை, மறைமாவட்ட அதிபர் ஆகியோர் பங்கேற்று திருப்பலி நடத்தினர். ஆர்.சி.பள்ளியின் கலை நிகழ்ச்சிகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர். மேலும் விவிலிய போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடந்தது. இதில் சுரண்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணி ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், சுரண்டை பங்கு எப்.எஸ்.எம்.அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: