காங்கயத்தில் கீர்த்திலால்ஸின் வைர, தங்க நகை கண்காட்சி

திருப்பூர், ஜன.18: கீர்த்திலால் சார்பில் வைரம் மற்றும் தங்க நகை கண்காட்சி காங்கயம் அய்யாசாமி காலனி பிரதான சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் நாளை (19ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (20ம் தேதி) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

 இதில் நவீன டிசைன்களுடன் இந்திய கைவினைஞர்களின் தங்க மற்றும் வைர நகைகளை வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம். பல விதமான, தனித்துவமிக்க பாரம்பரிய நகைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதில் மோதிரங்கள், காதணிகள், பதக்கங்கள், வளையல்கள், நெக்லஸ்கள் மற்றும் காப்பு, கை வளையல்கள் இடம்பெறுகிறது.
Advertising
Advertising

Related Stories: