காய்கறி பதப்படுத்தும் நிலையத்தை வேளாண் வணிக ஆணையர் ஆய்வு

போச்சம்பள்ளி, ஜன.11:  போச்சம்பள்ளியில், ₹52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள காய்கறி பதப்படுத்தும் நிலையத்தை, வேளாண் வணிக ஆணையர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், மா மற்றும் பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும், விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் நோக்கிலும், மாவட்டத்தில் 10 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. போச்சம்பள்ளி பகுதியில் மா, அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏதுவாக முதன்மை பதப்படுத்தும் நிலையம் ₹52 கோடி செலவில் கட்டப்பட்டு, பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை, வேளாண் வணிக ஆணையர் சன்ஜோங்கம் ஜடாக்சிரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் ராமமூர்த்தி, செயலாளர் கோபிநாத், உதவி வேளாண்மை அலுவலர் குமார், மா உற்பத்தியாளர் சங்க பொருளாளர் செந்தில்சண்முகம், தென்னை உற்பத்தியாளர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புலவர்கிருஷ்ணன், நாகு.நக்கீரன், வெங்கடேசன், காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: