தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸம்வத்ஸராபிஷேக விழா

நெல்லை, டிச. 21:  வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழப்பேட்டையில் தன்வந்திரிபெருமாள் ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு  15வது ஆண்டு ஸம்வத்ஸராபிஷேகம், திருக்கல்யாணம், முரளிதர சுவாமியின் 58வது ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி ஒரே மேடையில் 16 தெய்வ திருமணத்தை முன்னிட்டு மகோத்ஸவம் 2019 என்ற தெய்வீக திருப்பாடல் அடங்கிய சிடியை முரளிதர சுவாமி வெளியிட பிஎஸ்என்எல் பொதுமேலாளர் வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார். நிர்மலா முரளிதரன் குத்து விளக்கேற்றினார். நாளை முதல் இரு நாட்கள் ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதை முன்னிட்டு 108 சுமங்கலி பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி வஸ்திர தானம், மங்கள ஆரத்தியை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் முக்கியப் பிரமுகர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

  ஜன.1ம் தேதி புத்தாண்டை முன்னிட்டு சரஸ்வதி ஹோமம் மகா சுதர்ஷன ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம், குபேர ஹோமங்கள்  விமரிசையாக நடக்க உள்ளன. மார்ச் 17ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் 16 தெய்வ திருமண வைபவம் நடைபெற உள்ளது. ஆரோக்யலட்சுமி சமேத தன்வந்தரி பெருமாள் மற்றும் 75 சித்தர்கள் எழுந்தருளியுள்ள இக்கோயிலில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம்.

Related Stories: