ஆலங்குளத்தில் காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்

ஆலங்குளம், டிச. 18:   ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் ரவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கங்காதரன் ஆகியோர் ஆலங்குளம் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் கடைகளில் தயாரிப்பு தேதி குறிப்பிடாத, காலாவதியான திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள், திறந்தவெளியில் ஈக்கள் மொய்க்க கூடிய திண்பண்டங்கள், அழுகிப்போன பழங்கள் போன்றவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்து கிருமி நாசினியால் அழித்தனர்.

மேலும் பஸ் நிலையம் அருகில் இருந்த பழக்கடை,கோழிக்கடையில் இருந்த தண்ணீரில் டெங்கு கொசு புழு கண்டறியபட்டு உரிமையாளருக்கு அபராதம் விதித்ததோடு  எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து உணவு விடுதிகளில் ஆய்வுமேற்கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கைகளுக்கு கையுறை,தலைக்கு தொப்பி அணிந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தினர். அத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திடீர் ஆய்வில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றபட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: