திமுக செயல் வீரர்கள் கூட்டம்

கூடலூர்,டிச.11: கூடலூர் நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நாடார் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முபாரக், நீலகிரி பாராளுமன்ற தொகுதி பொருப்பாளர் வழக்கறிஞர் சரவணன், தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் கா.ராமச்சந்திரன், கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி ஆகியோர் கலந்து கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், பொதுக்குழு உறுப்பினர்சீனி, நகர நிர்வாகிகள் செல்லதுரை, ஜபருல்லா, நாகேஷ்வரி, ரசாக், இளஞ்செழியன், நெடுஞ்செழியன் மற்றும் கிளை கழக செயலாளர்கள்,அணிகளின் அமைப்பாளர்கள், துனை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குசாவடி முகவர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை செயலாளர் செல்லதுரை நன்றி கூறினார்.

Related Stories: