திருப்புத்தூரில் சாலைக்கேற்ற வாய்க்கால் அமைக்க வலியுறுத்தல்

திருப்புத்தூர், நவ. 30: திருப்புத்தூரில் கடந்த மாதம் அவரச அவசரமாகப் போடப்பட்ட சாலைகளுக்கு அருகில் கழிவுநீர் வாய்க்கால் உயர்த்தப்படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலைக்கேற்றவாறு வாய்க்காலை உயர்த்தி அமைக்க வேண்டம் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புத்தூரில் கடந்த மாதம் மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தைச் சுற்றி சுற்றுப்புறச் சாலைகள் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வருகைக்காக புதிதாகப் போடப்பட்டது. அதில் திருப்புத்தூர் பஸ் நிலையம் மற்றும் அக்னி பஜாரிலிருந்து செட்டிய தெரு வழியாக தாலுகா அலுவலகம் செல்லும் சாலை உயரமானதால் கழிவுநீர் வாய்க்கால்கள் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் அச்சாலையை கடக்கும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் சாலையை விட்டு சற்று விலகினாலும் மிகப்பெரிய விபத்தை சந்திக்கும் இடமாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் பாதசாரிகளும் சாலையில் செல்லும்போது வாகனங்களுக்காக ஒதுங்கினாலும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலைக்கேற்றவாறு கழிவுநீர் வாய்க்காலின் உயரத்தை உயர்த்தினால் பெரும் விபத்தை தவிர்க்க முடியும். அவசர கதியில் சாலை போடப்பட்டதால் சாலையின் இரு ஒரங்களிலும் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் பெரும் விபத்துக்கு ஆளாகும் முன் சாலை ஒரங்களில் கால்வாய்யை உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: