கரும்பு பயிர்களுக்கு வறட்சி காப்பீடு தொகை

கள்ளக்குறிச்சி, நவ. 16: கிராம ஏரிகளின் பாசன கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் காந்த் தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், கரும்பு பயிர்களுக்கான வறட்சி காப்பீடு தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஏரிகளின் பாசன கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுங்காயமங்கலம் ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாயிகளின் புகார்கள் அனைத்தும் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என சார் ஆட்சியர் காந்த் தெரிவித்தார். கூட்டத்தில், தனி வட்டாட்சியர்கள் சையத்காதர், அருங்குளவன், பாலசுப்ரமணியன், மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், கல்யாணசுந்தரம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், வேளாண்மைதுறை அலுவலர்கள் அனுராதா, தேவி, கிருஷ்ணகுமாரி, உதவி வேளாண்மை துறை அலுவலர் ஞானவேல், மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் கலைச்செல்வி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: