குழந்தைகள் தின விழா கோலாகலம் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாடம் நடத்தி அசத்தினர்

ஊட்டி, நவ. 15:  குழந்ைதகள் தினத்தை முன்னிட்டு கூடலூர் தேவாலா அருகே அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாடம் நடத்தி அசத்தினர். ஊட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிய உணவு வழங்கினர். முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் சார்பில் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு, முட்டை, ஐஸ்கீரிம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

 இதேபோல் ஊட்டியில் உள்ள கிரசென்ட் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆடை அலங்கார போட்டி நடந்தது. இதில் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் பல்வேறு வண்ணமயமான உடைகளை அணிந்து போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி தாளாளர் உமர் பாரூக் பங்கேற்று பரிசு வழங்கினார். இதில் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கமல்குமார் விக்டர் தலைமை தாங்கினார். ஆசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி குழந்தைகள் தினம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

இதே போல் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முகமது அமீன் தலைமை வகித்தார். ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். கூடலூர்:  கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. இதையொட்டி மாணவர்கள் ஆசிரயர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாகவும் மாறி ஒரு நாள் செயல்பட்டனர்.

 காலை பிரார்த்தனை கூட்டத்தில் செய்திதாள் படிப்பது, அணிவகுப்பு, கடவுள் வணக்கம் போன்றவையை ஆசிரியர்கள் செய்தனர். பின்னர் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்த மாணவர் ஒருவர் வருகை பதிவேடு மற்றும் பள்ளி செயல்பாட்டை கவனித்தார். பின்னர் வகுப்பறையில் ஆசிரியர்கள் அமர்ந்தனர். அவர்களுக்கு மாணவ மாணவிகள் பாடம் எடுத்து அசத்தினர்.

Related Stories: