×

கஜா புயல் முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 15: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கஜா புயல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.கஜா புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்த நாள் முதல் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், மீன்வளத் துறையினர், சுகாதாரத்துறை, காவல் துறையினர் என அனைவருமே பரபரப்புடன் முகாமிட்டு வருகின்றனர்இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி, மோர்பண்ணை, கடலூர், உப்பூர் மற்றும் திருவாடானை தாலுகாவில் உள்ள காரங்காடு, முள்ளிமுனை,

நம்புதாளை, தொண்டி, எம்.ஆர்.பட்டிணம், நாரேந்தல், தாமோதிரம்பட்டிணம், பாசிப்பட்டிணம், எஸ்.பி.பட்டிணம் போன்ற கடலோர கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பாலைக்குடி, முள்ளிமுனை, நம்புதாளை போன்ற இடங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று பார்வையிட்டார்.  ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தமீம்ராஜா, திருவாடானை தாசில்தார் சேகர் மற்றும் மண்டல துனை தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோரிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக பாதுகாப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவேண்டும் என அறிவுறுத்தி சென்றார்.

Tags : District Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...