பெண்கள் நல விடுதிகளை பதிவு செய்ய உத்தரவு

திருப்பூர், நவ.14: திருப்பூரில் பெண்கள் நல விடுதிகளை சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் பழனிச்சாமி கூறினார். திருப்பூர் மாவட்டத்தில் வெளியூரில் இருந்து வந்து பணிபுரியும் பெண்கள், இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் சிறார்கள் நலனுக்காக நடத்தப்படும் விடுதிகள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் சமூக நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும். அரசு இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு கருத்து சமர்ப்பிக்காத விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

Related Stories: