பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சேலம், நவ.2:  சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், தங்களது பகுதியில் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘செந்தாரப்பட்டி 6வது வார்டைச் சேர்ந்த 3 பேர் கும்பல், பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.   கிராம சந்தையில் வியாபாரம் செய்ய சைக்கிள், பைக்களில் பாத்திரம், பாய், காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகளை மிரட்டி, இந்த கும்பல் பணம் பறித்து வருகிறது. இது தொடர்பாக அவர்கள் மீது தம்மம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்ைல. எனவே, பணம் பறிக்கும் கும்பல் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: