மதுக்கடைக்கு சென்ற கட்டிடத்தொழிலாளி பாம்பு கடித்து சாவு

காங்கயம்,நவ.1:காங்கயம்- தாராபுரம் ரோட்டில் உள்ள களிமேடு  பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(46). கட்டிட தொழிலாளி.  இவர் நேற்று முன்தினம் இரவு  8 மணியளவில் தனது நண்பர்களுடன் காங்கேயம்- முத்தூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு  சென்றார். நண்பர்கள் இரு சக்கர வாகனத்துடன் ரோட்டில் நின்று கொண்டனர். முருகேசன் மட்டும் சற்று தொலைவில் இருந்த காட்டில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடைக்கு நடந்து சென்ற போது பாம்பு ஓன்று முருகேசன் காலில் கடித்தது.உடனே திரும்பி ஓடி வந்து நண்பர்களிடம் கூறியுள்ளார்..இதை தொடர்ந்து காங்கயம் அரசு மருத்துவமனைக்கு முருகேசனை அழைத்து சென்றனர். முருகேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக  தெரிவித்தனர்.

Related Stories: