மயிலம் தமிழ் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

மயிலம், அக். 31: மயிலம் மத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை அறிவியல் கல்லூரியில்  பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். சிவப்பிரகாசர் அரங்கில் நடந்த விழாவுக்கு கல்லூரி செயலாளர் ராஜீவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் விஜயகாந்தி வரவேற்றார். துணை முதல்வர் திருநாவுக்கரசு அறிமுகவுரையாற்றினார்.

மதுரை காமராஜர் பல்கலை கழக தமிழ் துறை தலைவர் சத்தியமூர்த்தி, மலேசிய தமிழ் மணி மன்ற தேசிய தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.மலேசிய தமிழ் அறிஞர்கள் பன்னீர்செல்வம், முருகையா வாழ்த்துரை வழங்கினார்கள். அயலக இலக்கியங்கள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் மலேசியா நாட்டின் தமிழ் சங்கத்தினர் தமிழ்ச்செல்வி, முனியம்மாள், கோகிலவாணி, செல்வராஜ், பெருமாள். கோவிந்தசாமி, கணேசன், தங்கமாள், ஜிவரேக்க, சாந்தி, மூர்த்தி, குணசேகரன் ஆகியோர் கட்டுரை வாசித்தனர். மயிலம் கல்லூரி தமிழ்த் துறை முதுகலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: