மகனுக்கு எழுதி கொடுத்த சொத்தை மீட்டுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழுப்புரம், அக். 30:  சொத்தை மட்டும் எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரை கவனிக்காததால் சொத்தை திருப்பி ஒப்படைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பிரிதிவிமங்கலத்தை சேர்ந்த சையத்ராப் சாயபு (90). இவர் ஆட்சியர் சுப்ரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்னையும், எனது மனைவியையும் நல்ல முறையில் கவனிப்பதாக கூறி எனக்கு சொந்தமான சொத்தை எனது மூத்த மகன் சையத்ஷா ஆலம், தானசெட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வாங்கினார். ஆனால் என்னையும், எனது மனைவியையும் கவனிக்காமல் துன்புறுத்தி வருகிறார். மேலும் நான் எழுதிக்கொடுத்த சொத்தை வேறு நபர்களுக்கு விற்பதற்கு முயற்சி செய்து வருகிறார். நான் எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து என்னிடமே சொத்தை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Stories: