தேன்கனிக்கோட்டை, அக்.26: தளி அருகே சாத்தனூர் ஊராட்சியில், ரூ30 லட்சத்தில் உச்சனப்பள்ளி முதல் அடவிசாமிபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணியை திமுக எம்எல்ஏ பிரகாஷ் துவக்கி வைத்தார். தளி அருகே சாத்தனூர் ஊராட்சி உச்சனப்பள்ளி முதல் அடவிசாமிபுரம் கிராமம் வரை சாலை வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் எம்எல்ஏ பிரகாஷிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ30 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு, சாலை பணிகளை துவக்கி வைத்தார்.