தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

தேன்கனிக்கோட்டை, அக்.25:  தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் டெங்கு, பன்றி காய்ச்சல்  விழிப்புணர்வு நடைபெற்றது. முன்னதாக அரசு மருத்துவமனையில் கொசுப்புழு  ஒழிப்பு புகைமருந்து அடித்து டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. கொசுக்களை அழிக்க புகை மருந்தும் அடித்ததுடன், தொட்டிகளில் பிடித்து வைத்துள்ள தண்ணீரில் அபேட் மருந்து ஊற்றினர். தொடர்ந்து  கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டதோடு, ெபாதுமக்களுக்கு டெங்கு  விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வட்டார  மருத்துவ அலுவலர் கார்த்தி, மருத்துவ அலுவலர் வெங்கடேஷ், அரசு மருத்துவமனை  அலுவலர் ஞனமீனாட்சி, சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, ஆய்வாளர்  ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: