ஊதிய உயர்வு வழங்க கோரி ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

விழுப்புரம், அக். 17:  ஊதிய உயர்வு வழங்க கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் இரண்டாவது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

500க்கும் அதிகமாக உள்ள குடும்ப அட்டை உள்ள கடைகளில் எடையாளர்களை நியமிக்க வேண்டும். பொது விநியோக திட்டத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்ைதயும் விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும். பொதுவிநியோக திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும், என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கடந்த 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 2,800 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. நேற்று 2வது நாளாக நடந்த ஸ்டிரைக்கில் 60 சதவீதம் பேர் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் 1,800 கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி திடல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். தனசேகரன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கொட்டும் மழையில் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

Related Stories: