த.ம.ஜ.க. வலியுறுத்தல் முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி தேனி கூட்டுறவு விற்பனை சங்க தலைவராக தேர்வு

தேனி, அக். 17: தேனி கூட்டுறவு விற்பனை சங்க தலைவராக முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி தேர்வு செய்யப்பட்டார். தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கான இயக்குநர் தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தது. இதில் ராஜகுரு, மஞ்சுளா, குருமணி, கோவிந்தம்மாள், ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, லட்சுமி, வீரமணி, எல்லப்பட்டி முருகன், நாராயணன், சுல்தான் இப்ராகிம் ஆகியோர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து நேற்று இச்சங்கத்திற்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தலைமையிலும், துணைப்பதிவாளர் உதயகுமார் முன்னிலையிலும் நடந்தது. அனைத்து இயக்குநர்களும் கலந்து கொண்டனர். இயக்குநர்கள் மத்தியில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான் தலைவராக ஜெயலட்சுமியையும், துணைத் தலைவராக மஞ்சுளாவையும் தேர்வு செய்ய அமைச்சர் பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.இதையடுத்து முன்னாள் எம்.எல்.ஏவும், தேனி ஒன்றிய அதிமுக செயலாளரின் மனைவியுமான ஜெயலட்சுமி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக மஞ்சுளா தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் தேனி தொகுதி எம்.பி. பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. கணேசன்,துணைத்தேர்தல் அலுவலர் செல்வம், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து

கொண்டனர்.

Related Stories: