இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

தேன்கனிக்கோட்டை, அக்.17: கெலமங்கலம் வேளாண் துறை சார்பில் பிதிரெட்டி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார வேளாண் துறை சார்பில் பிதிரெட்டி கிராமத்தில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. மத்திய திட்டம் வேளாண் துணை இயக்குநர் பிரதீப்குமார்சிங் இயற்கை வேளாண்மை குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் பேசினார். கெலமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை குறித்தும், பயன்கள் குறித்தும் எடுத்து கூறினார்.

உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை அலுவலர் பன்னீர்செல்வம் உயிர் உரங்கள் அவசியம் குறித்து பேசினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி சிறு தானியங்கள் உற்பத்தி குறித்து பேசினார். துணை வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் அசோலா உற்பத்தி அவசியம் குறித்தும், உதவி வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் சுந்தர்ராஜன், அருள்கணேசன், சின்னபையன்,வேளாண்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கூறினர். அட்மா திட்ட மேலாளர் சதீஷ்குமார்,உதவி மேலாளர்கள் சண்முகம்,ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: