மணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை பாம்பு கடித்தது

திருச்சி,  அக்.12: முசிறியில் மணல் கடத்தலை தடுக்க சென்ற விஏஓவை கட்டுவிரியன் பாம்பு  கடித்தது. திருச்சி ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வரும் அவரை கலெக்டர்  ராஜாமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

திருச்சி மாவட்டத்தில்  திருட்டுத்தனமாக ஆறுகளில் மணல் எடுப்பதை தடுப்பதற்கு வருவாய் ஆய்வாளர்கள்  தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  முசிறி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஒரு குழுவும், ஆமூர் வருவாய் ஆய்வாளர்  தலைமையில் ஒரு குழுவும், மணல் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு  வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் முசிறி மெயின் ரோடு  வெள்ளூர் சத்திரம் என்ற இடத்தில் பிள்ளாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர்  நாகராஜன் இரு சக்கர வானத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  முதலுதவி பெற்ற பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார்.

 தகவலறிந்த திருச்சி கலெக்டர் ராஜாமணி மருத்துவமனைக்கு சென்று  விஏஓ நாகராஜனை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை  அளிக்க வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு  அறிவுறுத்தினார். பெரம்பலூர்,அக்.12:  பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூரில் அரசு நிதியுதவிபெறும் பள்ளியான புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு பரிசோதனை அடிப்படையில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடந்தது. இதனையொட்டி ஏற்கனவே மருத்துவ குழுவினர் மாணவிகளின் கண்பார்வை அளவை கண்டறிய பரிசோதனை முகாமினை நடத்தியிருந்தனர். இதில் கண்களில் லேசான பார்வை குறைபாடுள்ள மாணவிகள் கண்டறியப்பட்டனர்.

இவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை அரசு மருத்துவர் செந்தில்நாதன் வழங்கினார். இதற்கான நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஸ்டெல்லா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

Related Stories: