தாமிரபரணி புஷ்கரத்தையொட்டி மயிலாடுதுறை-நெல்லை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

மயிலாடுதுறை,அக்.12: தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் போது மயிலாடுதுறை-நெல்லை ரயில் நிறுத்தியதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை முதல் திருநெல்வேலி வரை தினமும் காலை 11.20 மணிக்கு தென்னக ரயில்வே சார்பில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலால் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்பட  மக்கள் பெரிதும் பயன்படுத்தி  வருகின்றனர். குறிப்பாக ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் பெரியோர்களுக்கும், குழந்தைகளோடு செல்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயிலை அடிக்கடி ரயில்வே துறையினர் தண்டவாள பணி நடைபெறுகிறது என்று காரணம் காட்டி நிறுத்தி விடுகிறனர். இது போன்ற ரயில்வே பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கவேண்டிய மயிலாடுதுறை, தஞ்சாவூர் பாராளுமன்றம் உறுப்பினர்கள் கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும் தற்போது தாமிரபரணி மகாபுஷ்கரம் 12 ஆண்டுகளுக்கு  பிறகு நடைபெறும் போது குறிப்பாக  காவேரி புஷ்கரம்  நடைபெற்ற மயிலாடுதுறையிலிருந்து பக்தர்கள் நெல்லை சென்று தாமிரபரணியில் புஷ்கர புனித நீராடிட  செல்ல மிகவும் வசதியாக இருந்த மயிலாடுதுறை திருநெல்வேலி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றம் வேதனையளிக்கிறது. மேலும் இதே வழித்தடத்தில் இதே நேரத்தில் சோழன் போன்ற ரயில்கள் மட்டும் இயக்கப்படுவது எப்படி என்பது புரியவில்லை.  ஆகவே  தாமிரபரணி புஷ்கர காலத்தில் குறிப்பாக வரும் 23ம் தேதி வரை  அவசியம் மயிலாடுதுறை திருநெல்வேலி  ரயிலை இயக்க வேண்டும் என்று தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: