தாமிரபரணி புஷ்கர விழாவில் திருவருட்பா அகவல் முற்றோதல்

வி.கே.புரம், அக்.10: தாமிரபரணி புஷ்கர விழா நாளை(11ம்தேதி) முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளதையொட்டி பாபநாசம் சித்தர்கள் கோட்டம் சார்பில் பாபநாசத்தில் கால்நாட்டு வைபவத்துடன்தொடங்கி நடந்து வருகிறது.

நேற்று டாணா சமரச சுத்த சன்மார்க சங்கத்தைச் சார்ந்த செல்வராஜ், லட்சுமணன், உலகநாதன் தலைமையில் திருவருட்பா அகவல் முற்றோதல் நடந்தது. இன்று(10ம்தேதி)  மாணவர்களுக்கு தாமிரபரணி காப்போம் என்பது பற்றிய கட்டுரை, கவிதை போட்டிகள் நடக்கிறது. நாளை (11ம்தேதி) முதல் 22ம்தேதி வரை நாள்தோறும் மாலை தமிழ் ஆமக முறைப்படி தாமிரபரணியில் 16 வகையான தீபஆரத்தி விழா நடக்கிறது. திருவருட்பா அகவல் முற்றோதல் நிகழ்ச்சியில் ராஜேனீஸ்வரன்சுவாமி, முருகநாதன்சுவாமி, தங்கமணிசுவாமி நிதிக்குகுழு தங்கத்துரை, நிர்வாககுழு பூக்கடை கண்ணன்  உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: