மாற்றுத்திறனாளிகள் மனுநீதி நாள் முகாமில் 662 பேர் மனு

விழுப்புரம், செப். 26: விழுப்புரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மனுநீதி நாள் முகாமில் 662 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் சுப்ரமணியன் பெற்றார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. ஆட்சியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 662 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கடனுதவி, ேமாட்டார் சைக்கிள், காதுகேட்கும் இயந்திரம், மூன்று சக்கர சைக்கிள், செயற்கைகால் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனுக்களை பெற்ற ஆட்சியர் துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், சமூகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, பயிற்சி துணை ஆட்சியர் வித்யா, சமூகபாதுகாப்புத்திட்ட தாசில்தார்

ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: