பத்திரப்பதிவில் டோக்கன் முறையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

வானூர், செப். 25: தமிழகத்தில் பதிவுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து வரப்படுகிறது. ஆன்லைன் பத்திரப்பதிவை தொடர்ந்து பதிவு செய்து வருபவர்களுக்கு ஓடிபி எண் அனுப்பப்பட்டு பிறகு பதிவுக்கு ஏற்கப்பட்டது.

அதனையடுத்து டோக்கன் முறை கடந்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் பதிவுக்கு வருபவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக வந்துவிடவேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் பின்வரிசையில் இருப்பவர்கள் பதிவுக்கு வரவேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உடல்நலம் சரியில்லாதவர்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு வருபவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு

வருகின்றனர். மேலும் இந்த முறையால் பதிவுசெய்ய பலமணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் காலை முதல் மாலை வரை சார்பதிவு அலுவலகம் கூட்டமாகவே உள்ளது. வில்லங்கம் மற்றும் நகல் கேட்டு வருபவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில் அவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள திட்டத்தை மாற்றி ஆன்லைன் பத்திரப்பதிவில் பழைய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: